மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து + "||" + Electric rail service on the port route canceled today due to maintenance work

பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மத்திய ரெயில்வேயின் தானே - கல்யாண் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.43 மணி முதல் பிற்பகல் 3.46 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு - கல்யாண் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். அப்போது ரெயில்கள் தானே, திவா, டோம்பிவிலி ஆகிய ரெயில்நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். கல்வா, மும்ரா, கோபர், தாக்குர்லி இடங்களில் நிற்காது.

பயணிகள் சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் அங்கு செல்லலாம். பராமரிப்பு பணியையொட்டி இன்று மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் ரெயில்கள் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

துறைமுக வழித்தடத்தில் பன்வெல் - மான்கூர்டு இடையே இன்று காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 11.06 மணி முதல் மாலை 4.38 வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும், காலை 10.03 மணி முதல் மாலை 4.08 மணி வரை சி.எஸ்.எம்.டி. மற்றும் வடலா ரோட்டில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி.- மான்கூர்டு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை போரிவிலி - கோரேகாவ் இடையே ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த நேரத்தில் மின்சார ரெயில்கள் அனைத்தும் போரிவிலி - கோரேகாவ் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். பராமரிப்பு பணி காரணமாக மேற்கு ரெயில்வேயில் இன்று சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்: மின்சார வாரியம் தகவல்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை (புதன்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...