மாவட்ட செய்திகள்

கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது + "||" + AIADMK to appoint Kolathur Union Committee Chairman The takeover

கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது

கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
கொளத்தூர்,

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுவுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 12 வார்டு உறுப்பினர்களில் அ.தி.மு.க. 3 இடங்களிலும், பா.ம.க. 3 இடங்களிலும், தி.மு.க. 4 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றின

இந்த நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும், தாழ்த்தப்பட்டோர் பிரிவு உறுப்பினர் யாரும் இல்லாததால் ஒன்றியக்குழு தலைவர் தேர்வில் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதற்காக 2 முறை ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அ.தி.மு.க. கைப்பற்றியது

இதனிடையே தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிைலயில் அ.தி.மு.க.வில் இணைத்தார். இதைத் தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்களில் அ.தி.மு.க. கூட்டணியின் பலம் அதிகரித்தது.இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. வெற்றி பெற்ற புவனேஸ்வரிக்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக்-ஸ்வெரேவ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.
2. அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா - சென்னை மருத்துவமனையில் அனுமதி
சீர்காழி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாரதி, கீழ்வேளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
3. அ.தி.மு.க., பா.ஜ.க. செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வேண்டுகோள்
அ.தி.மு.க., பா.ஜ.க. செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? - கமல்ஹாசன் பேட்டி
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பதற்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
5. அ.தி.மு.க.வில் புதிய அமைப்பு செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்து உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை