மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது + "||" + At the temple festival meeting 4 jeweled people 3 women arrested

கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது

கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது
கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை,

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கேரள மாநிலம் மலம்புழாவை சேர்ந்த ராஜம்மாள் (வயது 72) என்ற மூதாட்டி உள்பட 4 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அரங்கேறியது.

இது குறித்த புகாரின் பேரில் கோவை பெரியகடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 3 பெண்களை சந்தேகத் தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடைய மனைவி செல்வி (36), பராசக்தி என்ற ஆதிபராசக்தி (36), இந்துமதி (27) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து 4 பெண்களிடம் 12 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. திருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை
திருப்பூரில் வீடு புகுந்து தொழிலதிபரின் மனைவியை அரிவாளால் மிரட்டி 10¾ பவுன்நகையை,ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. ஊறுகாய் வியாபாரி மனைவியை கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
ஊறுகாய் வியாபாரி மனைவியை கத்தியால்வெட்டி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
4. அரக்கோணம் பகுதியில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு
அரக்கோணம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.