மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது + "||" + In kanchipuram Coronavirus Awareness Study meeting Held by the Collector

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது.

அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி, மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளான கை கழுவும் முறைகள், இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும்.

அனைத்து ஆஸ்பத்திரிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள டாக்டரை அணுக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பழனி, ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.15 கோடியே 62 லட்சம் செலவில் காஞ்சீபுரத்தில் நவீன விளையாட்டு வளாக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
காஞ்சீபுரத்தில் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தரத்துடன் கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
2. காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பங்கேற்றார்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
3. காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்
காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதியில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
4. வேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
வேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது
காஞ்சீபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயனாளிகள் பலருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. அப்போது ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது.