மாவட்ட செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி + "||" + DMK Vineyar pays tribute to Professor Anbazhagan

பேராசிரியர் அன்பழகன் படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி

பேராசிரியர் அன்பழகன் படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி அவரது படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மரணமடைந்ததையொட்டி புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில கட்சி அலுவலகம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் அவரது உருவப் படத்துக்கு தி.மு.க.வினர் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா.திலீபன், பொருளாளர் சண்.குமாரவேல், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல், நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாநிலம்

வடக்கு மாநில கட்சி அலுவலகத்தில் தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொருளாளர் வக்கீல் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டையில் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் அன்பழகன் உருவப்படத்துக்கு தி.மு.க. சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தொகுதி அவைத்தலைவர் தனகோடி, துணை செயலாளர் பலராமன், பொருளாளர் செல்வம், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிவக்குமார், துணை அமைப்பாளர் செல்வம், மீனவர் அணி துணை அமைப்பாளர் பூபதி, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் சேகர், சிவசக்தி, வேல்முருகன், சந்துரு, மாநில உதயநிதி ஸ்டாலின் மன்ற தலைவர் உத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நினைவுநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கு.தங்கமுத்து படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி
நினைவுநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கு.தங்கமுத்து படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. கொரோனா பாதிப்பால் பலியான அப்துல்கலாம் நண்பர் உருவப்படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி
கொரோனா பாதிப்பால் பலியான முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பர் உருவப்படத்துக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
3. கும்பகோணம் பள்ளி தீ விபத்து 16-ம் ஆண்டு நினைவு தினம்: பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 16-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பலியான குழந்தைகளின் பெற்றோர்-பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். போலீசார் அனுமதி மறுத்ததால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
4. மதுபான கடைகள் திறப்பை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் போராட்டம்
மதுபான கடைகள் திறப்பை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.