மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது சீமான் பேச்சு + "||" + The Citizenship Amendment Act is against all people Seaman talk

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது சீமான் பேச்சு

குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது சீமான் பேச்சு
குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிரானது என திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னூர் உழவர்சந்தை மைதான திடலுக்கு நேற்று மாலை வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

இந்தியாவில் 11 மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது கிடையாது. அனைத்து மக்களுக்கும் எதிரானது. இந்தியாவில் தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

சென்னையில் பேரணி

இனிமேல் இந்தியாவுக்குள் வருபவர்களை வேண்டுமானால் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஏற்கனவே வந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்து வருபவர்களிடம் ஆதாரத்தை கேட்பது தேவையற்றது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தால் ரஜினியும் முகாமிற்கு தான் செல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வரும் 21-ந் தேதி சென்னையில் நடைபெறும் பேரணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு
வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு.
3. கிரண்பெடி குறித்து அவதூறு பேச்சு: நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் திரும்பி சென்றனர்.
4. குடியுரிமை  திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி வள்ளிநாயகம் சேலத்தில் நடந்த விழாவில் பேசினார்.
5. அரசுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு: புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க திட்டம்? அமைச்சர் கந்தசாமி பரபரப்பு பேச்சு
மத்திய அரசின் நிலைப்பாட்டை பார்க்கும்போது எதிர்காலத்தில் புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைத்து விடுவார்களோ? என அமைச்சர் கந்தசாமி அச்சம் தெரிவித்தார்.