மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு + "||" + Money laundering case against real estate tycoon: 3-year jail sentence for mother-daughter

ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபரிடம் பண மோசடி செய்த தாய், மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்,

கருங்கல் திப்பிறமலை பகுதியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி சுஜிதா குமாரி (வயது 59). இவருடைய மகள் ஸ்ரீஜா. இவருக்கு திருமணமாகி மேக்காமண்டபத்தில் கணவருடன் வசித்து வருகிறார். சுஜிதா குமாரிக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் கருங்கல் பாலூரில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு இந்த நிலத்தை தட்டான்விளையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான லிகோரிவளன்(47) என்பவருக்கு ரூ.12 லட்சத்துக்கு விற்க சுஜிதாகுமாரி முடிவு செய்தார். இதற்காக ரூ.8 லட்சம் முன் பணமாக அவரிடம் இருந்து சுஜிதாகுமாரியும், ஸ்ரீஜாவும் பெற்று கொண்டனர்.

இந்த நிலையில் அந்த நிலத்தை லிகோரிவளனுக்கு தெரியாமல் மேக்காமண்டபத்தை சேர்ந்த சலீம் என்பவருக்கு சுஜிதாகுமாரியும், ஸ்ரீஜாவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இதனை அறிந்த லிகோரிவளன், சுஜிதா குமாரி மற்றும் ஸ்ரீஜாவிடம் கொடுத்த முன்பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து உள்ளனர்.

3 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து லிகோரிவளன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், சுஜிதாகுமாரி, ஸ்ரீஜா ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும் இருவருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.8 லட்சத்தையும், பணத்தை பெற்ற நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜரானார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோர்ட்டு, தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு
கோர்ட்டு, தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு
2. கைதி 2-ம் பாகத்துக்கு கோர்ட்டு தடையா? பட நிறுவனம் விளக்கம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019-ல் திரைக்கு வந்த கைதி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.
3. பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
4. விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு.
5. மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளையே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்களுக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.