மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது + "||" + Arrested for motorcycle theft

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
அரக்கோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்,

அரக்கோணத்தில், திருவள்ளூர் சாலையில் உள்ள சோதனைச்சாவடி பகுதியில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வேறு திசையில் தப்பி செல்ல முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் வாலாஜா தாலுகா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரே‌‌ஷ் (வயது 34) என்பதும், 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நாட்டு துப்பாக்கியால் அண்ணனை தாக்கி விட்டு தலைமறைவான விவசாயி கைது
ஏரியூர் அருகே நிலத்தகராறில் நாட்டு துப்பாக்கியால் அண்ணனை தாக்கிவிட்டு தலைமறைவான விவசாயியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
2. தொழிலாளியை தாக்கியவர் கைது
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்த ரஜினி (வயது 56). தொழிலாளி சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31).
3. பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பேரிகை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வக்கீல்; 6 பேர் கைது
விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதுசம்பந்தமான வீடியோ வாட்ஸ்- அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியது.
5. வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது
திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.