மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; கன்னியாகுமரியில் 31-ந்தேதி வரை படகு போக்குவரத்து ரத்து + "||" + Coronavirus virus echo; Boat traffic canceled at Kanyakumari till 31st

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; கன்னியாகுமரியில் 31-ந்தேதி வரை படகு போக்குவரத்து ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; கன்னியாகுமரியில் 31-ந்தேதி வரை படகு போக்குவரத்து ரத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிப்பார்கள். அதன்பிறகு கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அருகில் மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதற்காக கன்னியாகுமரி படகுத்துறையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என்ற 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகள் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து வருவார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் படகில் பயணம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

விடுதி அறைகளில் ஏற்கனவே புக் செய்தவர்களும் ரத்து செய்து விட்டனர். பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்களின் கூட்டம் இல்லை. குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனை ஏற்கனவே மூடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் படகில் ஏற வந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபற்றி பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு - சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு
கன்னியாகுமரியில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்களை தனிமை படுத்தி வைத்துள்ள முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை பாராட்டினார்.
2. கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை
கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பதில்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காங்கிரசார் நடத்திய பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதி
சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.