மாவட்ட செய்திகள்

‘கொரோனா’ முன் எச்சரிக்கை: கும்பகோணத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரம் + "||" + Early Coronal Warning: In Kumbakonam, health promotion work intensified

‘கொரோனா’ முன் எச்சரிக்கை: கும்பகோணத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரம்

‘கொரோனா’ முன் எச்சரிக்கை: கும்பகோணத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரம்
‘கொரோனா’ முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கும்பகோணம்,

உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் நகராட்சி ஆணையர் லட்சுமி தலைமையில் நகர்நல அலுவலர் பிரேமா முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் சுகாதார மேம்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

பொது கழிவறை

பஸ் நிலையம், ரெயில்நிலையம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, மீன்மார்க்கெட், தாராசுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொது கழிவறைகள் தூய்மையாக உள்ளதா? என கண்காணிக்க நகராட்சி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணம் மீன்மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வருவதால், மீன் மார்க்கெட்டை மூடுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பகோணம் நகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டு பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிவண்ணன், கும்பகோணம் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

கிருமி நாசினி

கும்பகோணம் வரும் அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் நேற்று நகராட்சி ஆணையர் தலைமையிலான பணியாளர்கள் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கி, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழை எதிரொலி: நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியாக விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
2. தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தொடரும் சம்பவம்: மீன்பிடிக்க சென்ற போது கடலில் மூழ்கியவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
மீன்பிடிக்க சென்ற போது குமரி கடலில் மூழ்கிய மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
3. வனப்பகுதியில் மரங்களை வெட்டிய மர்மநபர்கள்: மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்
கம்பம் சுருளி அருவி அருகே உள்ள வெண்ணியாறு வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 தோதகத்தி மரம், ஒரு தேக்கு மரம் என 3 மரங்கள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
4. ரூ.4½ கோடியில் உள் விளையாட்டரங்க கட்டுமான பணிகள் தீவிரம் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது
புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட் டரங்கத்தில் ரூ.4½ கோடியில் உள் விளையாட்டரங்கம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
5. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை