மாவட்ட செய்திகள்

தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Theni mayilatumparai demanded a ban on the cutting down of trees to a further fine of Rs 10,000 each - High Court orders

தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு

தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, 

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த நாகூர் அனிபா, சின்னதங்கம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வருசநாடு அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன பகுதியில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நன்கு வளர்ந்து காடு போல காட்சியளிக்கின்றன. இந்தநிலையில் அரசு அதிகாரிகள் இந்த மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்த மரங்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக நிற்கின்றன. ஒரு சில மரங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தவை.

இந்த நிலையில் மரங்களை வெட்டக்கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. மயிலாடும்பாறையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்களை எந்த காரணமும் இல்லாமல் வெட்டுவதை ஏற்க முடியாது. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறையும். எனவே தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மரங்களை வெட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மயிலாடும்பாறையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இந்த வழக்கு பொதுநலன் கருதி தொடர்ந்ததாக தெரியவில்லை. எனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2. கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம்
கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை.
3. தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனியில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
4. முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.
5. திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியருக்கு அபராதம்
திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியர் உள்ளிட்டோருக்கு மாநகராட்சி குழுவினர் அபராதம் விதித்தனர்.