மாவட்ட செய்திகள்

சேதுபாவாசத்திரம் அருகே கடலூர் கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை + "||" + Rs 20 lakh jewelery loot at Cuddalore collector's house near Sethupavasatram

சேதுபாவாசத்திரம் அருகே கடலூர் கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை

சேதுபாவாசத்திரம் அருகே கடலூர் கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் இவர், குடும்பத்தினருடன் கடலூரில் தங்கி உள்ளார். நாடியம் கிராமத்தில் உள்ள கலெக்டரின் வீட்டின் காவலுக்காக அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவர் அங்கு தங்கி உள்ளார்.

நேற்று காலை செல்வம் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி ஆகியவை கழற்றப்பட்டு வீட்டின் பின் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போடப்பட்டிருந்தது.

55 பவுன் நகைகள்

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. தடயவியல் நிபுணர்கள் துணை சூப்பிரண்டு கலை கண்ணகி தலைமையில் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

போலீசார் தங்களை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டில் பெருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கணினியை கழற்றி தண்ணீர் தொட்டியில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வலைவீச்சு

இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.கலெக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த கடையின் காவலாளி மாயமானதால் அவரை கண்டுபிடிக்க கோரி கடைமுன்பு உறவினர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நகை கடையை உடைத்து துணிகரம்: 5 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
குமாரபுரம் அருகே நகைக்கடை ஷட்டரை உடைத்து 5 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். லாக்கரை உடைக்க முடியாததால் 35 பவுன் நகை தப்பியது.
3. பூதப்பாண்டி அருகே துணிகரம் ஒரே நாளில் 3 கோவில்கள், கடையில் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
பூதப்பாண்டி அருகே ஒரே நாளில் 3 கோவில்கள், கடையில் மர்ம நபர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
4. தென்தாமரைகுளத்தில் துணிகரம் அம்மன் கோவிலில் 17 பவுன் நகை கொள்ளை
தென்தாமரைகுளத்தில் அம்மன்கோவில் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. திருச்சியில் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
திருச்சியில் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...