மாவட்ட செய்திகள்

கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல் + "||" + 300 special buses operating from Kumbakonam

கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல்

கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல்
கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என பொதுமேலாளர் ஜெபராஜ் நவமணி கூறினார்.
கும்பகோணம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் வெளி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

குறைந்த பயணிகள்

அதன்படி கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னைக்கு 90 பஸ்களும், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 210 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட தகவலை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி கூறினார்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆதலால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்ததையடுத்து காலை 5 மணிக்கு மேல் குறைவான அளவில் தான் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களில் இருந்து டிரைவர்கள், நடத்துனர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர முடியவில்லை. குறைவான அளவில் பஸ்கள் இயங்கியதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குவைத்தில் இருந்து 114 பயணிகள் சிறப்பு விமானத்தில் திருச்சி வந்தனர்
குவைத்தில் இருந்து 114 பயணிகள் சிறப்பு விமானத்தில் திருச்சி வந்தனர்.
2. சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
3. திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்
திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு சென்றனர்.
4. வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.
5. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சிவன், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊரடங்கால் யாரும் கிரிவலம் செல்லவில்லை. இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.