மாவட்ட செய்திகள்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு + "||" + Collector Study in Coronavirus Isolation Unit at Namakkal Government Hospital

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களை தனிமைப்படுத்தி வைக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரிவை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
நாமக்கல்,

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதக்கூடிய காய்ச்சல் கண்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரிவை மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தனிமைப்படுத்தும் பிரிவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதக்கூடிய காய்ச்சல் கண்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க 78 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். மேலும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டு உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவினையும் பார்வையிட்டனர்.

கிருமிநாசினி

தொடர்ந்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி மூலப்பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள கிடங்கினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மருந்து அடிக்கும் உபகரணங்கள் தேவையான அளவில் உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பா‌ஷா உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள்

பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவ்வாறு வெளியே சென்று வீடு திரும்பும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

மாவட்ட எல்லையை பொறுத்த வரையில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வர எந்த தடையும் ஏற்படுத்தவில்லை. நமது மாவட்டத்தில் 2 பேருக்கு சந்தேகத்தின் பேரில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரத்து 787 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்துக்கு வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்துக்கு 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 787 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
2. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
3. மாவட்டத்தில் 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
4. கிருஷ்ணகிரி கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
கிருஷ்ணகிரி கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
5. சிறப்பாக பணியாற்றிய அஞ்செட்டி கிளை நூலகருக்கு விருது கலெக்டர் வழங்கினார்
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் நூலகர்களுக்கு மாவட்ட வாரியாக டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை