மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம் + "||" + Stuck on the bus at Nagercoil Adolescent death: A traumatized husband and a victim

நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்

நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் தினகரன் சுந்தரம் (வயது 33), ஒரு ஓட்டலில் ஸ்டோர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி எஸ்தர் ராணி (26). இவர்கள் இருவரும் கடந்த 21-ந் தேதி மளிகை பொருட்கள் வாங்கி விட்டு கலெக்டர் அலுவலகம் முன் வந்த போது சாலை ஓரம் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளை இயக்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் லேசாக மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறிய தினகரன் சுந்தரமும், எஸ்தர் ராணியும் ஸ்கூட்டருடன் சேர்ந்து சாலையில் விழுந்தனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தினகரன் சுந்தரம் மற்றும் எஸ்தர் ராணி மீது ஏறி இறங்கியது. அதாவது அரசு பஸ்சின் சக்கரத்தில் 2 பேரும் சிக்கிக் கொண்டனர்.

கணவர் சாவு

இந்த விபத்தில் எஸ்தர் ராணி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். தினகரன் சுந்தரம் படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனே தினகரன் சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் தினகரன் சுந்தரம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் சக்கரத்தில் சிக்கி எஸ்தர் ராணி இறந்த அடுத்த நாளே அவருடைய கணவரும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன 2 பேர் உடல் கருகி சாவு
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அரசு பஸ்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன. இதில் 2 பேர் உடல் கருகி இறந்தனர்.
2. காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது.
4. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை
கொரோனா ஊரடங்கால் உடல்நலம் பாதித்த தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.