மாவட்ட செய்திகள்

குளித்தலையில், விஷம் குடித்து திருச்சி தம்பதி தற்கொலை + "||" + In the Kulithalai, drinking poison Trichy couple commit suicide

குளித்தலையில், விஷம் குடித்து திருச்சி தம்பதி தற்கொலை

குளித்தலையில், விஷம் குடித்து திருச்சி தம்பதி தற்கொலை
குளித்தலையில் விஷம் குடித்து திருச்சி தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் சம்பவத்தன்று ஒரு முதியவர் மற்றும் மூதாட்டி ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 76), அவரது மனைவி விஜயா (69) என்பது தெரியவந்தது. மகன் வீட்டில் தங்கியிருந்த அவர்கள், மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று நினைத்த அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரனின் மகன் மணிமாறன் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஆஸ்பத்திரியில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல் தம்பதி கைது
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வந்தபோது 8 மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
2. பல்லாரி அருகே கபடி வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை - கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
பல்லாரி அருகே கபடி வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
3. இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடையில் நூதன திருட்டு: ஈரான் நாட்டு தம்பதி கைது
இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடையில் நூதன முறையில் ரூ.10 ஆயிரம் திருடிய ஈரான் நாட்டு தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
4. தம்பதிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: 21 இத்தாலி சுற்றுலா பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
தம்பதிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக, 21 இத்தாலி சுற்றுலா பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
5. கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு
பொதட்டூர்பேட்டை அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.