மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல் + "||" + 2 thousand beds ready for Corona treatment - Collector Vinay Information

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்த வர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை, 

மதுரை மாவட்டத்தில் 19 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடைய உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் என 382 பேர் அடையாளம் காணப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது வீடுகளில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டு தினசரி வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மதுரை நகரில் மேலமடை, நரிமேடு, தபால்தந்தி நகர் மற்றும் மதுரை புறநகரில் மேலூர், எழுமலை, திருமங்கலம் ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் 73 ஆயிரத்து 396 குடும்பங்களில் உள்ள 3 லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பணியில் 902 சுகாதாரத்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவர்கள் தினந்தோறும் சுழற்சிமுறையில் நேரில் சென்று கொரோனா அறிகுறி ஏதும் இருக்கிறதா என கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - அமிதாப் பச்சன் உருக்கம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன் என நடிகர் அமிதாப்பச்சன் உருக்கமாக கூறியுள்ளார்.
2. கொரோனா பாதிப்பு; மரணத்தில் தப்பி பிழைத்த நபருக்கு மருத்துவ பில் தந்த பேரதிர்ச்சி
அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மரணத்தில் இருந்து உயிர் தப்பிய முதியவருக்கு வந்த மருத்துவ பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 7,740 இடங்களில் ஏற்பாடு - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 483 மாவட்டங்களில் 7,740 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டி ‘வார்டு’கள் தயார் - ரெயில்வே அறிவிப்பு
கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரெயில் பெட்டிகளை ‘வார்டு’களாக மாற்ற தொடங்கப்பட்ட பணியில் 2 ஆயிரத்து 500 வார்டுகள் தயார் நிலையில் உள்ளது என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
5. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக திருப்பூரில் தயாராகும் கவச உடை
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக கவச உடைகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...