மாவட்ட செய்திகள்

கோவையில், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் - ஆட்டுக்கறி கிலோ ரூ.800-க்கு விற்பனை + "||" + In Coimbatore, meat stores Alemodyne Meeting - Goat is sold for Rs.800 a kg

கோவையில், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் - ஆட்டுக்கறி கிலோ ரூ.800-க்கு விற்பனை

கோவையில், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் - ஆட்டுக்கறி கிலோ ரூ.800-க்கு விற்பனை
கோவையில் நேற்று இறைச்சி கடைகளில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆட்டுக்கறி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை, 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க, கடைகளை திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற் கிடையே இறைச்சிக் கடை களையும் இன்று முதல் (திங்கட்கிழமை) மூட மாவட்ட கலெக்டர் உத்தர விட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், ஈஸ்டர் பண் டிகை என்பதாலும் இறைச்சி கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளும் அதிகாலை முதல் திறந்து இருந்தன. பொதுமக்கள் கூட்டமாக வந்து இறைச்சி வாங்குவதை தடுக்க அனைத்து கடைகள் முன்பும் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கோடுகள் போடப்பட்டு இருந்தன.

தடை உத்தரவு காரணமாக கோவையில் ஒரு சில கடைகளில் மட்டுமே மீன்கள் இருந்தன. அதுவும் குறைந்த அளவிலேயே இருந்தன. இதனால் ஏரி, குளங்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் தான் விற்பனைக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளில் மீன்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.

அனைத்து இறைச்சி கடைகளும் மதியம் 1 மணிக்கு மூடப்பட்டன. இதுகுறித்து இறைச்சி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப் பட்டது. இதனால் கோழி கிலோ ரூ.240-க்கும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. மதியம் 1 மணிக்கு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டன.

நாளை (அதாவது இன்று) முதல் அனைத்து இறைச்சி கடைகளும் மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். எனவே அரசு அறிவிப்பு வரும் வரை கோவையில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் இனி மூடப்பட்டுதான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தற்காலிக சந்தையாக மாறிய புது பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் வாங்கிச் சென்றனர்
புதுவை பஸ் நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டதையொட்டி பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருட்களை வாங்கிச் சென்றனர்.
2. சேலத்தில் 8 இடங்களில் சந்தைகள் அமைப்பு, காய்கறிகள் வாங்க அலைமோதிய கூட்டம் - முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தல்
சேலத்தில் 8 இடங்களில் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
3. ஊட்டி, கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்
144 தடை உத்தரவால் ஊட்டி, கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.