மாவட்ட செய்திகள்

தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார் + "||" + DMK MLAs provide relief items for laundry workers Presented

தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்

தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்
தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூரில் தி.மு.க. சார்பில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வரும் 200 சலவை தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் தலைமை தாங்கி, சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் முன்னிலை வகித்தார். இதில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் வேணுகோபால், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், சிலுவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி மற்றும் தி.மு.க. ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தி.மு.க. சார்பில் சாணார்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த 500 சலவை தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை
கொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
3. இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
4. திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. விளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
விளாத்திகுளத்தில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை