மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்ப்பு + "||" + Recruitment of 79 women who passed the police examination in the district

மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்ப்பு

மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கொரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில மாவட்டங்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

அதேநேரம் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் ஊரடங்கால் பணியில் சேரமுடியாமல் உள்ளனர். எனவே, அவர்களை உடனடியாக பணியில் சேர்த்து பயிற்சி அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.

79 பெண்கள் சேர்ப்பு

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 80 பெண்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டனர். மேலும் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதில் ஒரு பெண் திருமணமாகி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 79 பேரும் பணியில் சேர்க்கப்பட்டனர். மேலும் 79 பேருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

15 நாட்கள் பயிற்சி

இந்த 79 பேருக்கும் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் 15 நாட்கள் அடிப்படை போலீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் பயிற்சி நடைபெற உள்ளது. அப்போது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செமஸ்டர் தேர்வு கட்டணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்!
தொழில்நுட்பம் என்பது நமது அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கும் புதிய மொழியாக கருதப்படுகிறது. அந்தவகையில், தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் என்ஜினீயரிங் படிப்பு என்பது 45 விதமான படிப்புகளை படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்க்கை நெறி சார்ந்த படிப்புகளாகவும் கருதப்படுகிறது.
2. சாத்தான்குளம் போலீசார் மீது புகார்: தொழிலாளியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
சாத்தான்குளம் போலீசார் மீது புகார் கூறிய தொழிலாளியிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
3. கர்நாடகத்தில் இன்று தொடங்குகிறது என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு
என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 1.90 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
4. கயத்தாறில் மதுபாட்டில் கேட்ட தகராறில் பயங்கரம்: மீன் வியாபாரி அடித்துக்கொலை 2 பேரிடம் போலீஸ் விசாரணை
கயத்தாறில் மதுபாட்டில் கேட்ட தகராறில் மீன் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. ராமநகர் அருகே சென்னப்பட்டணாவில் இறந்தவரின் இறுதிச்சடங்கில் 500 பேர் பங்கேற்றதால் பரபரப்பு போலீஸ் விசாரணை
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில், இறந்தவரின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.