மாவட்ட செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு: கர்நாடகத்தில் மதுபானம் விலை ‘திடீர்’ உயர்வு - இன்று முதல் அமலுக்கு வருகிறது + "||" + Government that shocked wine lovers In Karnataka Sudden increase in alcohol prices Comes into effect today

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு: கர்நாடகத்தில் மதுபானம் விலை ‘திடீர்’ உயர்வு - இன்று முதல் அமலுக்கு வருகிறது

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு: கர்நாடகத்தில் மதுபானம் விலை ‘திடீர்’ உயர்வு - இன்று முதல் அமலுக்கு வருகிறது
கர்நாடகத்தில் மதுபானம் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று(வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த 4-ந் தேதி 40 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மது பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் அளவுக்கு பெண்களும் வரிசையில் வந்து மதுபானங்களை வாங்கினர். சில கடைகளின் முன்பு பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனாவால் எழுந்துள்ள நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வசதியாக டெல்லியை போல், கர்நாடகத்திலும் மதுபானம் மீது 6 சதவீதம் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலால் வரி உயர்வு நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

25 சதவீதம் உயர்வு

இந்த நிலையில் மது பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுத்துள்ள கர்நாடக அரசு, மதுபானங்கள் மீதான கலால் வரியை கூடுதலாக 17, 21, 25 என்ற விகிதத்தில் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதாவது ரூ.559 வரையிலான மதுபானங்கள் மீது 17 சதவீதமும், ரூ.600 முதல் ரூ.1,199 வரையிலான மதுபானம் மீது 21 சதவீதமும், ரூ.1,200 முதல் ரூ.15 ஆயிரம் வரை உள்ள மதுபானம் மீது 25 சதவீதமும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு இன்று(வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபானங்களின் விலை கணிசமாக உயருகிறது. இனி மது பிரியர்கள், கூடுதல் விலை கொடுத்து மதுபானம் வாங்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில்
கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில் அளித்து உள்ளார்.
2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவல்
தற்போதைய நிலையை பார்க்கும்போது, கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
3. கர்நாடகத்தில் கொரோனா சமுதாய பரவலுக்கு வாய்ப்பு - தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா சமுதாய பரவலாகமாற வாய்ப்பு உள்ளதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
5. இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி
கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.