மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு + "||" + Two-wheeler parking system police are actively monitoring the traffic congestion in Dharmapuri

தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு

தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தர்மபுரி நகரில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. தர்மபுரி நகர பகுதியில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்க உதவி கலெக்டர் தேன்மொழி தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டது. அப்போது தர்மபுரி நகராட்சியில் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி அரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், பழைய தர்மபுரி மற்றும் பாப்பாரப்பட்டி சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை ராமாக்காள் ஏரி அருகே உள்ள மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் சாலையில் இருந்து வரும் வாகனங்களை கிருபானந்த வாரியார் பள்ளி அருகில் உள்ள மைதானத்திலும், வெண்ணாம்பட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்களை மாந்தோப்பு ரெயில்வே ரோடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நகர பஸ் நிலையம்

அதியமான்கோட்டை, தொப்பூர் சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், அன்னசாகரம், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, உங்கரானஅள்ளி, கொல்லஅள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை பழைய கோர்ட்டு வளாகத்தில் உள்ள மைதானத்திலும், நகர பகுதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நகர பஸ் நிலைய பகுதியிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உரிய அடையாள அட்டைகளுடன் அத்தியாவசிய பணிகளுக்காக செல்பவர்களை மட்டும் சோதனைக்கு பின் போலீசார் அனுமதித்தனர். வெளியூர்களில் இருந்து தர்மபுரிக்கு தேவையின்றி வருபவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இருசக்கர வாகனங்களை அந்தந்த பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு சமூக இடைவெளியை பின்பற்றி நகர பகுதிக்குள் சென்று வருமாறு அறிவுறுத்தினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தினத்தையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மற்றும் காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2. சுதந்திர தின விழா: பாளையங்கோட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
3. நாளை சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு
சுதந்திரதின விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமானநிலையத்தில் வாகன சோதனை மும்முரமாக நடத்தப்படுகிறது.
5. கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.