மாவட்ட செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற ஏற்பாடு + "||" + Arrangements to convert the Vegetable Shops at the Collector Inspection Bus Station at Cuddalore Manjukuppam Ground

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற ஏற்பாடு

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற ஏற்பாடு
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை மாற்றுவதற்காக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கடலூர் அண்ணா மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் கடலூர் பஸ் நிலையத்திற்கும், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு, பல்வேறு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு முடியும் நிலையில், மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

ஆய்வு

இருப்பினும் 18-ந்தேதி முதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளது.

அதை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காய்கறி கடைகளை சமூக இடைவெளியுடன் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர். எந்த இடத்தில் காய்கறி கடைகளை அமைப்பது, மீன், இறைச்சி கடைகளை எங்கு மாற்றுவது என்று ஆலோசனை நடத்தினர்.

முக கவசம்

பின்னர் இது பற்றி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு மாற்ற இருக்கிறோம். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் அதிக மீன்கள் வரத்து இருக்கும். இதனால் இங்கு மீன் அங்காடி திறக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ளது. இங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் அதை எதிர்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவு வேண்டும் என்றார்.

ஆய்வின் போது கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் செல்வக்குமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் குமரன், நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு: மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. திருப்பூர் மாவட்டத்தில் 77 அம்மா நகரும் ரேஷன்கடைகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
உடுமலையில் நடந்த விழாவில், 77 அம்மா நகரும் ரேஷன் கடைகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
3. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தகவல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆஸ்டின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
4. சேலத்தில் முழு ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு - வீடுகளில் முடங்கிய மக்கள்- வெறிச்சோடிய சாலைகள்
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியதால், போக்குவரத்து இல்லாமல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
5. வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட்
வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி.