மாவட்ட செய்திகள்

மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது அமைச்சர் பேட்டி + "||" + There is no chance of a hindrance, the minister said

மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது அமைச்சர் பேட்டி

மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது அமைச்சர் பேட்டி
கோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் ஏழை குடும்பங்களுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தனது சொந்த செலவில் கொரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி கொண்ட தொகுப்பினை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதன்படி நகராட்சி கரட்டுப்பாளையம் 31-வது வார்டு பகுதியில் 1,200 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடை காலத்திற்கு தேவையான 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழக அரசின் வசம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தினால் மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாகத்தான் உள்ளது. நெய்வேலியில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை.

கூடுதல் நிதி

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா நிவாரண நிதியை வழங்கக்கோரி பிரதமரிடம் முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மின்வாரிய பணிகளுக்கு 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது தான். அவர்கள் மின்கம்பம் ஏற வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்துள்ளது. முடிவுகள் வெளியானவுடன் பணி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, தாசில்தார் கதிர்வேல், கண்ணகி விழாக் குழு தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
2. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
3. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
4. கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
5. தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி
தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.