மாவட்ட செய்திகள்

குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு + "||" + Gold deposit in 28 isolation center of Tirukkovilur from Gujarat and Maratham

குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு

குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு
குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு.
திருக்கோவிலூர்,

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் வருகையால் அந்த அந்த பகுதியில் வருவாய்த் துறையினர் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையம் அமைத்து, அங்கு அந்த தொழிலாளர்களை தங்க வைத்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் திருக்கோவிலூர், பரடாப்பட்டு, பனப்பாடி, மேமாளூர், வடமருதூர், மாடாம்பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குஜராத்தில் இருந்து 6 பேரும், மராட்டியத்தில் இருந்து 22 பேரும் அத்திப்பாக்கம் வழியாக சொந்த ஊர் திரும்பினார்கள். அங்கு தாசில்தார் சிவசங்கரன் நேரில் சென்று வெளிமாநிலத்தில் இருந்து வந்த 28 பேரையும் அத்திப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தார். மேலும் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரி சோதனையும் எடுத்துள்ளனர். சோதனையின் முடிவு வந்த பின்பு 28 பேரும் உரிய காலத்தில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், அதுவரை தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மைத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையத்தில் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை: ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை விரட்டியடித்த போலீசார்
கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
3. ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு
ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு.
4. ஏலகிரி மலை பகுதியில் மர்மநபர்கள் தீ வைப்பு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது
ஏலகிரி மலை பகுதியில் மர்மநபர்கள் தீ வைப்பு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது.
5. ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு
சங்கராபுரம் அருகே ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு.