மாவட்ட செய்திகள்

மேட்டூர் அருகே, பாலியல் தொல்லையால் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது செங்கல் சூளை உரிமையாளர் கைது + "||" + Brick kiln owner arrested for sexually abusing a 12-year-old girl near Mettur

மேட்டூர் அருகே, பாலியல் தொல்லையால் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது செங்கல் சூளை உரிமையாளர் கைது

மேட்டூர் அருகே, பாலியல் தொல்லையால் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது செங்கல் சூளை உரிமையாளர் கைது
மேட்டூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காரணமாக குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் அருகே தாழையூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் 12 வயது சிறுமியும், அவளுடைய தாயாரும் வேலைபார்த்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுபற்றி அந்த சிறுமியிடம் தாய் கேட்டபோது செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி தான் இதற்கு காரணம் என கூறியுள்ளாள். பின்னர் மூர்த்தியிடம் அந்த சிறுமியின் தாய் சென்று இதுபற்றி கேட்டார். அப்போது மூர்த்தி அந்த சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

கைது

இந்தநிலையில் அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த சிறுமியிடம் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளாள். பின்னர் இதுபற்றி அந்த சிறுமியின் தாய் கருமலைக்கூடல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பழனியில் பழிக்குப்பழியாக நடந்த கொலையில் மேலும் ஒரு வாலிபர் சாவு முக்கிய குற்றவாளி கைது
பழனியில், பழிக்குப்பழியாக நடந்த கொலையில் மேலும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
2. 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
3. வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
மன்னார்குடி அருகே வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
4. விவசாயியை கொன்று போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி; மனைவி-மகன் உள்பட 3 பேர் கைது
திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயியை அடித்துக்கொன்று போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்ற மனைவி, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பழனியில் வாலிபர் வெட்டிக்கொலை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது
பழனியில் ஓட, ஓட விரட்டி வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.