மாவட்ட செய்திகள்

தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள் + "||" + Tomorrow is the last day to open a bank account at the post office

தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள்

தொழிலாளர்கள் நிவாரணம் பெற  தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள்
தேனி மாவட்டத்தில் தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி,

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆனந்தி கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலார்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் நல வாரியத்தில் வங்கி கணக்கு விவரங்களை இதுவரை கொடுக்காத அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் கிளையை அணுகி ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி கணக்கை உடனடியாக தொடங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு வங்கி கணக்கு தொடங்குவதற்கு நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே, இதுவரை வங்கி கணக்கு தொடங்காத தொழிலாளர்கள் ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் கட்டணம் எதுவுமின்றி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்களை நல வாரிய அலுவலகத்தில் சமர்ப்பித்தவர்களுக்கு இந்த சேவை பயன்பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனியில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
2. தேனி, கம்பத்தில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் உழவர் சந்தை
தேனி, கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.
3. தேனியில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்
தேனி மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
4. தேனியில் இருந்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தேனி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5. தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.