மாவட்ட செய்திகள்

மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல் + "||" + Liquor store licenses need to formulate a more general policy of bidding; The Governor's insistence

மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல்

மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல்
புதுச்சேரியில் மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி, 

 புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

கவர்னர் மாளிகை கடந்த 4 ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் புதுவை மாநில கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்பட பல நிலுவைதொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். 

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த கூறினேன். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை புதுவை அரசு பார்க்க வேண்டும். அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை நோக்குவது அவசியம். மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. 

இதுபோன்ற நிலையை புரிந்து கொண்டு, அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் திட்டங்களை பின்பற்ற முடிவெடுப்பவர்களுடனே தொடர வேண்டும். இதற்கு கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் கொரோனா பாதிப்பு தினமும் 100 ஆக மாறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்காவிட்டால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 100 ஆக மாறும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
2. கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் - அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு விடுத்துள்ளார்.
3. தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம் - கவர்னர் கிரண்பெடி வேதனை
புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு தனிநபர் பழக்க, வழக்கமே முக்கிய காரணம் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
4. ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் - கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்
புதுவையில் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
5. வழிபாட்டுத்தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.