மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் படகு இயக்குபவர்களுக்கு நிவாரணம் + "||" + Relief for boat operators in Kodaikanal

கொடைக்கானலில் படகு இயக்குபவர்களுக்கு நிவாரணம்

கொடைக்கானலில் படகு இயக்குபவர்களுக்கு நிவாரணம்
கொடைக்கானல் பகுதியில் படகு இயக்குபவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல், 

கொடைக்கானல் பகுதியில் வேலை இழந்து வறுமையில் வாடும் ஏராளமானோருக்கு நகர அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சார்பாக நட்சத்திர ஏரியில் படகுகள் இயக்கி வரும் 50 பேருக்கு நிவாரண பொருட்களாக அரிசி பைகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர அவைத்தலைவர் ஜான் தாமஸ் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்றார். முன்னாள் நகர சபை தலைவர் எம்.ஸ்ரீதர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வெங்கட்ராமன், பிச்சை, அழகு வினோத், ஆவின்பாருக்அகமது, ஜெயசுந்தரம், சுதாகர் பிரபு, பாலசுப்பிரமணி, ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.