மாவட்ட செய்திகள்

காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + An engineering student commits suicide Because the beloved woman was laughing with someone else

காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலித்த பெண் வேறு ஒரு மாணவரிடம் சிரித்து பேசியதால் மனமுடைந்த கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர், 

மணலி துர்கை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(வயது 21). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனது அறைக்குள் வழக்கம் போல தூங்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் நடராஜன், அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அறைக்குள் நடராஜன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், தூக்கில் தொங்கிய நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாணவர் நடராஜன், தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், வேறு ஒரு மாணவரிடம் சிரித்து பேசி பழகி உள்ளார். இதை பார்த்த நடராஜன், நம் காதலி வேறு ஒருவருடன் சிரித்து பழகுவதால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.