மாவட்ட செய்திகள்

சோளிங்கர் பகுதியில் 650 குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் - ஜி.சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார் + "||" + Groceries for 650 families in Sholingar area - G. Sampath MLA Presented

சோளிங்கர் பகுதியில் 650 குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் - ஜி.சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்

சோளிங்கர் பகுதியில் 650 குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் - ஜி.சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்
சோளிங்கர் பகுதியில் 650 குடும்பங்களுக்கு ஜி.சம்பத் எம்.எல்.ஏ. மளிகைப்பொருட்கள் வழங்கினார்.
சோளிங்கர், 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் சார்பில் சோளிங்கர் ஏ.எல். சாமிநகரில் உள்ள தாய்மூகாம்பிகை கோவில் அருகில் 300 ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய அவைத்தலைவர் ஏ.எல்.சாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏ.எல்.விஜயன், ஒன்றிய செயலாளர் பெல்.ச.கார்த்திகேயன், நகர செயலாளர் எம்.ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சி.ஆதிமூலம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சம்பத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் பங்கேற்று 300 ஏழை எளிய குடும்பங்களுக்கு மேற்கண்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் மணி மற்றும் வீராணம் முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சோளிங்கர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பாசறை செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஏழை எளிய மக்கள் 350 பேருக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள், முகக் கவசம் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் வழங்கினார்.