மாவட்ட செய்திகள்

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ரம்ஜான் வாழ்த்து + "||" + Greeting Governor Ramzan

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ரம்ஜான் வாழ்த்து

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ரம்ஜான் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மும்பை,

ரம்ஜான் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ரம்ஜான் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டியத்தில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துகள். புனித ரம்ஜான் மாதம் நோன்பு, பிரார்த்தனை, ஈகையின் முக்கியத்துவத்தை கொண்டு உள்ளது. கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவால் நமக்கு ஈகையின் முக்கியத்துவத்தை அடிகோடிட்டு காட்டி உள்ளது. பொது மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தும், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ரம்ஜானை கொண்டாட ேகட்டு கொள்கிறேன். இந்த ரம்ஜான் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை