மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு + "||" + Collector Raman Study on Mettur Dam

மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு

மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் வலதுகரை, இடதுகரை, கவர்னர் பாயிண்ட், 16 கண் மதகு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப் படும் தண்ணீரின் அளவு உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜ், உதவி பொறியாளர் மதுசூதனன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதே போன்று தேவூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் கிழக்குக்கரை கால்வாய், உபவாய்க்கால் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 76.18 அடியாக உயர்ந்துள்ளது.
2. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75.29 அடியாக உயர்ந்துள்ளது.
3. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.83 அடியாக உயர்ந்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நேற்று 4,379 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4,023 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
5. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.