மாவட்ட செய்திகள்

கடலூரில், தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை + "||" + In Cuddalore, the son committed suicide with his mother on the day the father died

கடலூரில், தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை

கடலூரில், தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை
கடலூரில் தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,

கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டை சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவருடைய மனைவி லதா (வயது 58), மகன் சேதுராமன்(26). இவர்கள் அனைவரும் கடலூர் கோண்டூர் சாய்பாபா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த முத்துகடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி இறந்து விட்டார். இதையடுத்து சேதுராமன் வேலைக்கு செல்லவில்லை. மாறாக அவர் மதுபழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. மேலும் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் சேதுராம னின் தாயும் இருந்து வந்தார்.

இதற்கிடையில் முத்து இறந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததால், அவருக்கு திதி கொடுக்க லதா ஏற்பாடு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் தாயும், மகனும் அதற்கான பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர். இது பற்றி வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடமும் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் லதாவும், சேதுராமனும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர், வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.

அங்கு லதாவும், சேதுராமனும் இறந்து கிடந்தனர். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முத்து இறந்த நாளில் லதாவும், சேதுராமனும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி லதாவின் உறவினர் ராதாகிருஷ்ணன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விரக்தி: ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி வயதான தம்பதி தற்கொலை முயற்சி
மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விரக்தியில் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற தம்பதி மீட்கப்பட்டு, ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
2. வாகன கடனுக்கு தவணை செலுத்தவில்லை என புகார்: போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து வாலிபர் தற்கொலை முயற்சி
பட்டுக்கோட்டையில் வாகன கடனுக்கு தவணை செலுத்தவில்லை என நிதி நிறுவனம் சார்பில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் மனவேதனை அடைந்த வாலிபர் போலீஸ் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3. விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல்
முசிறி அருகே கொளக்குடியில் வழிபாட்டிற்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. காதலன் வீட்டு முன்பு தற்கொலை செய்ய பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற பட்டதாரி பெண்
காதலன் வீட்டு முன்பு தற்கொலை செய்வதற்காக பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற பட்டதாரி பெண்ணை மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
5. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு? போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.

அதிகம் வாசிக்கப்பட்டவை