மாவட்ட செய்திகள்

கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு + "||" + Public agitated to evacuate pavement near Kotagiri

கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு

கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு குறிப்பிட்ட நடைபாதை தனது நிலத்தில் இருப்பதாகக்கூறி அதை தனி நபர் ஆக்கிரமித்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த்துறையினர் நில அளவை செய்து ஆய்வு நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட தனி நபர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், வருவாய்த்துறையினரால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் அங்கு நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நேற்று ஏராளமானோர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்படும் சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வரும் வரை நடைபாதையை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதை இரு தரப்பினரும் ஏற்று கொண்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - மசோதா இன்று தாக்கலாகிறது
கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது.
2. அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி 83 பேர் மனு
அரசு நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 83 பேர் மனு அளித்துள்ளனர்.
3. கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
4. ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.