மாவட்ட செய்திகள்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைப்பு + "||" + Shop-businesses blockade over father-son death in sathankulam

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைப்பு
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து, கரூரில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வியாபாரிகள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கரூர்,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்தில், போலீசாரை கண்டித்து வணிகர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். மேலும் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றி இறந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று கரூர் ஜவகர்பஜார், கோவைரோடு, வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், செங்குந்தபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பேக்கரி கடைகள், டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோன்று கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடியது

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜவகர்பஜார், கோவைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இருப்பினும் கரூர் பகுதியில் டீக்கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள மெடிக்கல்கள், இறந்த தந்தை-மகனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 11 மணி வரை அடைக்கப்பட்டு, பின்னர் திறக்கப்பட்டன.

கடையடைப்பை தொடர்ந்து மாலையில் வியாபாரிகள் தங்களின் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி, சாத்தான்குளத்தில் இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. முழுஊரடங்கால் நெல்லை முடங்கியது தூத்துக்குடி, தென்காசியில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழுஊரடங்கால் நேற்று நெல்லை முடங்கியது. தூத்துக்குடி, தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.
2. முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
நெல்லை, தென்காசியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
3. முழு ஊரடங்கு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
கோவையில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.
4. வேலூர் காந்திரோட்டில் தடையை மீறி இருபுறமும் கடைகள் திறப்பு
வேலூர் காந்திரோட்டில் தடையை மீறி இருபுறமும் கடைகள் திறப்பு.
5. வேலூர் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் சேதமடைந்த கடைகள் சீரமைப்பு
வேலூரில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் பலத்த காற்றால் சேதமடைந்த கடைகள் சீரமைக்கும் பணி நடந்தது. காய்கறி கடைகளை மீண்டும் நேதாஜி மார்க்கெட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.