மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு + "||" + Minister inspects office building work of Kumarapalayam Dasildar

குமாரபாளையம் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு

குமாரபாளையம் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு
குமாரபாளையம் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு.
குமாரபாளையம்,

குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் அறை, தாசில்தார் அலுவலக பிரிவு, சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, தேர்தல் பிரிவு, நிலஅளவை பிரிவு ஆகிய அலுவலகங்கள் ரூ.2.61 கோடியில் கட்டப்படுகிறது. இதில் தரைத்தளத்தில் வாகனகங்கள் நிறுத்தவும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் அலுவலகங்கள் செயல்படும் வகையிலும், குடிநீர் வசதி, ஒவ்வொரு தளத்திலும் கழிப்பிட வசதிகளுடன் கட்டப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தாசில்தார் உடனுக்குடன் பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கைகளை வழங்கி, பாதுகாப்பான இடங்களில் பொதுமக்களை தங்கவைத்து பாதுகாப்பு அளித்திடும் வகையில் இந்த அலுவலகமானது ஆற்றோரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ், தாசில்தார் தங்கம், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு
காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு அதிகாரி தகவல்.
2. போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு.
3. உயர்நீதிமன்ற வேலைக்குசிபாரிசு கேட்டு யாரும் வர வேண்டாம் அமைச்சர் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட நோட்டீஸ்
உயர்நீதிமன்ற வேலைக்குசிபாரிசு கேட்டு யாரும் வர வேண்டாம் என்று அமைச்சர் வீட்டு முன்பு நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பினை முன்னிட்டு கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.