மாவட்ட செய்திகள்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The SDPI has emphasized the 5 feature demands. Parties protest

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் காமராஜர் வளைவு, காந்தி சிலை முன்பு ஆகிய பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொது செயலாளர் அப்துல்கனி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்து வர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை குறைத்திட வேண்டும். மின் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும் வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் வி.களத்தூர், லெப்பைக்குடிகாடு, பாடாலூர், வாலிகண்டபுரம், விஸ்வக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு: சிவாச்சாரியார்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு: சிவாச்சாரியார்கள் ஆர்ப்பாட்டம்.
2. டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருவாரூரில், இந்திய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட கோரி திருவாரூரில் இந்திய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.