மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை + "||" + Extreme inspection of vehicles coming from outer districts at Vikravandi Customs

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை.
விக்கிரவாண்டி,

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் அவர்கள் மூலம் பிற மாவட்டங்களிலும் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் அனுமதி பெற்று செல்கின்றனரா? என போலீசார், மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள சோதனைச்சாவடியில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜி, தேவி, சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி இ-பாஸ் அனுமதி உள்ளதா? என தீவிர சோதனை செய்தனர். அவ்வாறு இ-பாஸ் அனுமதியின்றி வந்த வாகனங்களை, விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை: தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல்?
கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
3. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
4. தமிழகம் முழுவதும் திடீர் நடவடிக்கை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
5. சென்னையில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் 3 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
சென்னையில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்த 100 கோடி பணத்தை நூதனமாக மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.