மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Penalties for not wearing masks

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா?, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா?, பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த இரு சக்கர, 4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கும், கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினார். இதில் 24 நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.2,400 அபராதம் விதித்து ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூலிக்கப்பட்டது. அப்போது ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்க்கண்டில் முககவசம் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம்
ஜார்க்கண்டில் முககவசம் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2. கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம்
கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை.
3. முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.
4. திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியருக்கு அபராதம்
திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியர் உள்ளிட்டோருக்கு மாநகராட்சி குழுவினர் அபராதம் விதித்தனர்.
5. ‘சிங்கம்’ படப்பாணியில் சாகசம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மத்தியபிரதேசத்தில் ‘சிங்கம்’ படப்பாணியில் சாகசம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.