மாவட்ட செய்திகள்

இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் + "||" + The crowds in meat shops are the public who have forgotten the social gap

இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்

இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
கொரோனா வைரஸ் தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூர் நகரில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து இறைச்சி வாங்கி சென்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கடைகளின் முன்பு சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்பதற்கு வட்டம் போடப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநரிடம், குடியரசு தலைவர், பிரதமர் நலம் விசாரிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர்.
2. கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்; அதை எதிர்கொள்ளுங்கள் - பிரேசில் அதிபர்
கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்றும், அதை எதிர்கொள்ளுங்கள் என்றும் பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.
3. நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று: அரசு வக்கீல்-டாக்டர் கொரோனாவுக்கு பலி
நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அரசு வக்கீல், டாக்டர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
4. நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று: அரசு வக்கீல்-டாக்டர் கொரோனாவுக்கு பலி
நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அரசு வக்கீல், டாக்டர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.