மாவட்ட செய்திகள்

நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார் + "||" + Peter Paul, who is married to actress Vanitha, complains to the police

நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார்

நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார்
நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் மீது அவருடைய மனைவி, வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
பூந்தமல்லி,

நடிகர் விஜயகுமார்- நடிகை மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா. இவர், நடிகர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதா, 3-வது முறையாக பீட்டர் பால் என்பவரை சென்னையில் நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் மீது அவருடைய மனைவி எலிசபெத் ஹெலன், சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், கூறி இருப்பதாவது:-

விவாகரத்து அளிக்கவில்லை

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே என்னுடன் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால், நடிகை வனிதாவை திருமணம் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

நடிகை வனிதா, பீட்டர்பாலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அப்போதே எலிசபெத் ஹெலன், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பீட்டர்பால் தரப்பை அழைத்து போலீசார் விசாரித்தபோது, தாங்கள் எந்த திருமண ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அப்படி செய்யும் பட்சத்தில் முறையான விவாகரத்துக்கு பின்னரே வனிதாவுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் தனது மனைவிக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் நேற்று முன்தினம் திடீரென பீட்டர் பால், நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டது எலிசபெத் ஹெலன் தரப்பினரை அதிர்ச்சி அடையசெய்தது. அதனால் மீண்டும் அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நடிகை வனிதா, தற்போது 3-வது திருமணத்தின் போதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் மந்திரி மீது 3வது மனைவி புகார்
திருமணம் ஆனதில் இருந்தே உடல், மனரீதியாக என்னை துன்புறுத்தினார் என முன்னாள் மந்திரியின் 3வது மனைவி தெரிவித்து உள்ளார்.
2. ஆவின் முறைகேடு புகார் எதிரொலி: 34 உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
3. மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்
மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்.
4. வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த போலி அரசு அதிகாரி கடத்தல்
வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த புகாரில் போலி அரசு அதிகாரியை காரில் கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். போலி அரசு அதிகாரி பத்திரமாக மீட்கப்பட்டார்.
5. மத்திய அரசு சட்டத்தை ஆதரிப்பதாக தவறான தகவல் பரப்புகிறார்கள் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போலீசில் புகார்
சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.