மாவட்ட செய்திகள்

அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன் அறிக்கை + "||" + All industries should strictly follow environmental norms - Collector C Kathiravan report

அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன் அறிக்கை

அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன் அறிக்கை
அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு,

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் படி ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரில் தரம் மேம்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான காரணங்களை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையினை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால் சுற்றுச்சூழல் தர நிலைகளை தொழிற்சாலைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

எனவே பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். மீறினால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.