மாவட்ட செய்திகள்

வேலூர் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை மகன் கைது + "||" + Near Vellore Beaten with a stick Worker murder Son arrested

வேலூர் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை மகன் கைது

வேலூர் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை மகன் கைது
வேலூர் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளியை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமம் வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி (வயது 55) என்ற மனைவியும், ஜீவா (28) என்ற மகனும் உள்ளனர். தவமணி தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாந்தியிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தவமணி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்து, சாந்தியிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த ஜீவா, தந்தையை தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ஜீவா அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து, தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி கீழே விழுந்த தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், இறந்துபோன தவமணியின் பிணத்தை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் நேற்று காலை 9 மணி அளவில் வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் அருகே சொத்துகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்த மகன்கள் மீட்டுத்தரும்படி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முதியவர் மனு
வீடு, சொத்தை பறித்து விட்டு மகன்கள் விரட்டியடித்து விட்டனர். அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம், முதியவர் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்தார்.
2. வேலூர் அருகே பயங்கரம்: புழல் ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை ரவுடி உள்பட 7 பேர் கைது
வேலூர் அருகே புழல் ஜெயில் வார்டன் உள்பட 3 பேரை வெட்டிக் கொலை செய்த ரவுடி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
3. வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு
வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.