மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு இழப்பீடு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ‘திடீர்’ போராட்டம் + "||" + ‘Sudden’ protest by cleaning staff demanding compensation for amputation of hand of woman trapped in machine

எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு இழப்பீடு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ‘திடீர்’ போராட்டம்

எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு இழப்பீடு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ‘திடீர்’ போராட்டம்
பாளையங்கோட்டையில் எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டானது. அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.
நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 35). இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி, மக்கும் குப்பையை தனியாக பிரிந்து எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டு இருந்தார். திடீரென்று அவரது வலது கை, எந்திரத்தில் சிக்கி துண்டானது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்த ஊழியர்கள் ஓடி வந்தனர். பாக்கியலட்சுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை பெருமாள்புரம் மாநகராட்சி அலகு அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கையை இழந்து பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் அரசு பணி வழங்க வேண்டும். பாக்கியலட்சுமியின் குழந்தையை அரசு செலவில் படிக்க வைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வடசென்னை அனல்மின் நிலைய பணிக்கு எதிர்ப்பு: அத்திப்பட்டு கழிமுகப் பகுதியில் மீனவர்கள் போராட்டம்
வடசென்னை அனல்மின் நிலைய பணிக்கு எதிர்ப்பு: அத்திப்பட்டு கழிமுகப் பகுதியில் மீனவர்கள் போராட்டம்.
2. மீன்பிடி ஒழுங்குமுறை திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கடலுக்கு செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மாமல்லபுரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் 2-வது நாளாக உண்ணாவிரதம்
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. நிலப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் கார் முன்பு திடீரென்று அமர்ந்து போராட்டம்
நிலப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் கார் முன்பு ஆசாமி ஒருவர் திடீரென்று அமர்ந்து போராட்டம் நடத்தியதால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.