மாவட்ட செய்திகள்

முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Tamil Nadu Right to Life Party protests in Muthiahpuram

முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஒத்தரசன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் அந்தோணிசாமி வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலை வசதி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 52-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணாநகர் 3-வது தெருவில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சந்தியாகு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்தாஸ், முத்துகிருஷ்ணன், முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி வேலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் குமரியில் 200 இடங்களில் நடந்தது
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அகில பாரத இந்து மகா சபா சார்பில் நேற்று குமரி மாவட்டத்தில் 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கொரோனா நிவாரணம் வழங்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொரோனா நிவாரணம் வழங்க கோரி சேலம், எடப்பாடி, மேச்சேரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...