மாவட்ட செய்திகள்

தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா + "||" + DMK Nurse Tarna demands arrest of the person

தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா

தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா
வேப்பங்குப்பம் போலீஸ்நிலையம் முன்பு தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா.
அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா அகரம் கிராமத்தைச்சேர்ந்தவர் சுதாகர் (வயது 38). மேற்குமாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவி (33). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 15 ஆண்டுகளாக சுதாகர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு வேறு இடத்தில் பெண்பார்த்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தேவி, சுதாகர் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சுதாகர் உன்னை நான் காதலிக்கவில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த தேவி தன்னை காதலித்து ஏமாற்றிய சுதாகரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வேப்பங்குப்பம் போலீஸ் நிலையம் முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயங்கொண்டம் நகராட்சியில் சம்பள உயர்வு கேட்டு தூய்மைப் பணியாளர்கள் தர்ணா
ஜெயங்கொண்டம் நகராட்சியில் சம்பள உயர்வு கேட்டுதூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் தர்ணா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. எரிசாராய தொழிற்சாலை முன்பு டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா
கவுந்தப்பாடி அருகே எரிசாராய தொழிற்சாலை முன்பு டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா.
4. கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி அவினாசி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் தர்ணா
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி அவினாசி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் அரசு ஊழியர் சம்மேளனத்தினர் தர்ணா
புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடந்தது.