மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் ஷில்பா தகவல் + "||" + In Nellai district Through video display A crowd of people complaining Collector Shilpa Info

நெல்லை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.
நெல்லை,

திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கொரோனா நோய் தடுப்பு பணிகளையொட்டி தொடர் ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் காணொலி காட்சி மூலம் நடத்த நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நெல்லை மாவட்ட நிர்வாகத்தில் https>//tirunelveli.nic.in என்ற இணையதளத்தின் முதல் பக்கத்தில் District collector’s puplic Grievance meeting through Video Conference (மாவட்ட ஆட்சியரின் காணொலி காட்சி மூலமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்) என்பதை தேர்வு செய்து pettition Register கோரிக்கைப் பதிவு என்பதில் தங்களது கோரிக்கை தொடர்பான விவரங்களை அனைத்து நாட்களிலும் எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம்.

அதை தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரின் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் தங்களது அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்பார்கள்.

இந்த காணொலி காட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள் தங்கள் செல்போனில் https>//tirunelveli.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று காணொலி காட்சி மூலமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (GDP meeting with District collector through Video Conference) என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு தங்கள் பெயர், ஊர் ஆகியவற்றை பதிவு செய்து காணொலி காட்சிக்குள் நுழைந்து, தங்களது பெயர் குறிப்பிட்டு அழைக்கப் படும் வரை காத்திருக்க வேண்டும். பெயர் அழைக்கப்படும் போது தங்களது செல்போன் மூலம் கலெக் டருடன் காணொலி காட்சியில் நேரடியாக தங்களது கோரிக்கை தொடர்பான விவரங்களை சுருக்கமாக தெரியப்படுத்தலாம். அதையடுத்து தங்களது கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் காணொலி காட்சி மூலமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.14½ கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.14½ கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
2. நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.