மாவட்ட செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை + "||" + For the first 3 days of tomorrow Chance of heavy rain in Mumbai Meteorological Center Warning

நாளை முதல் 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாளை முதல் 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நாளை முதல் 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
மும்பை,

மும்பையில் கடந்த ஜூன் 10-ந் தேதி பருவ மழை காலம் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நகரில் லேசான மழையே பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் நகரில் 3 மி.மீ.யும், சாந்தாகுருசில் 0.6 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி உள்ளது.

இந்தநிலையில் நாளை (திங்கள்) முதல் 5-ந் தேதி வரை மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மும்பை தவிர ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாப்பூர், சாங்கிலி, பீட், லாத்தூர், உஸ்மனாபாத் ஆகிய மாவட்டங்களிலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதவிர நான்தெட், ஹிங்கோலி, பர்பானி, ஜால்னா, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை