மாவட்ட செய்திகள்

வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பூட்டிக்கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டியவர் கைது - பெண் உள்பட மேலும் 2 பேர் பிடிபட்டனர் + "||" + In locked houses The thieves were arrested Two more people were caught, including the woman

வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பூட்டிக்கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டியவர் கைது - பெண் உள்பட மேலும் 2 பேர் பிடிபட்டனர்

வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பூட்டிக்கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டியவர் கைது - பெண் உள்பட மேலும் 2 பேர் பிடிபட்டனர்
வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து புதுச்சேரியில் பூட்டிக் கிடந்த வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டியவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்த பெண் உள்பட மேலும் 2 பேரும் போலீசில் சிக்கினார்.
புதுச்சேரி,

புதுவை வெங்கட்டா நகர் 3-வது குறுக்குத்தெருவில் உள்ள அடுக்குமாடி குடி யிருப்பை சேர்ந்தவர் ரகனா பேகம் (வயது 55). டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனத் தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதற்காக அடிக்கடி அவர் டெல்லி சென்று வருவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் மாதம் டெல்லிக்கு சென்று இருந்தார். அப்போது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் ரகனா பேகம் அங்கேயே தங்கிவிட் டார். புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டை உறவினர் ஒருவர் கவனித்து வந்தார்.

இந்தநிலையில் பூட்டிக்கிடந்த ரகனா பேகத்தின் வீட்டுக்குள் இருந்து ஒரு மர்ம ஆசாமி தப்பி ஓடியதை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வரும் காவலாளி பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தகவல் தெரி வித்ததன்பேரில் பெரியகடை போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். இதில் ரகனாபேகத்தின் வீட் டில் பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள் ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த துணிகர சம்பவத்தில் தப்பி ஓடியதாக கூறப்படும் நபர் தான் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து புதுவை கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பி ரண்டு மாறன் மேற்பார்வையில் பெரியகடை போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் முருகன், புனித ராஜ் ஆகியோர் தலைமை யிலான தனிப்படையினர் நகை கொள்ளையனை தேடி வந்தனர். இதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இதில் சென்னை கோடம் பாக்கம் காமராஜ் காலனி 9-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ் (48) என்பவ ருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை தேடி வந்தநிலையில் காலாப்பட்டு நடுத்தெருவில் பதுங்கி இருப்ப தாக தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரகனா பேகத்தின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 40 பவுன் மற்றும் 1½ கிலோ வெள்ளிப் பொருட் களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து புதுவையை அடுத்த தமிழகப் பகுதிக்கு வந்து காலாப்பட்டில் வாடகைக்கு வீடு எடுத்து சுரேஷ் தங்கி இருந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக அங்கு இருந்தபடி புதுச்சேரிக்குள் வந்து நோட்டமிட்டு பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து சுரேஷ் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகளில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவங்களில் சுரேசின் நண்பரான ஸ்ரீதர், சுரேஷ் தொடர்பு வைத்து இருந்த கங்கா என்ற பெண் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் அம்பலமானது. இதையடுத்து அவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கைதான சுரேஷ், போலீசில் சிக்கியுள்ள அவரது நண்பர் ஸ்ரீதர், கங்கா ஆகிய 3 பேரையும் கொரோனா பரிசோதனைக் காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பரி சோதனை முடிவு வந்ததும் சுரேசை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கவும், அதன்பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அப் போது தான் புதுவையில் எத்தனை வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது பற்றிய விவரம் தெரியவரும்.

மேலும் சுரேசின் கூட்டாளி களான ஸ்ரீதர், கங்கா ஆகி யோரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குற்ற வாளிகளை பிடித்த பெரிய கடை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிர திக்‌ஷா கோத்ரா பாராட்டினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை